தமிழ் சினிமாவில் அந்தக்காலத்தில் இருந்த உடுமலை நாராயண கவி, பாபநாசம் சிவன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் , வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், காமராசன், மேத்தா, புலமைப்பித்தன், பா விஜய், நா முத்துக்குமார் என எண்ணற்ற கலைஞர்கள், இவர்கள் பாடல் எழுதுவதை மட்டும் செய்து வந்தனர்,பல நல்ல பாடல்களை நமக்கு கொடுத்திருக்கின்றனர்.
இவர்களில் இயக்குனர், நடிகர் டி ராஜேந்தரும் ஒரு நல்ல கவிஞர் இவர் கவி எழுதுவது மட்டுமல்லாமல், இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை என அனைத்திலும் பிஸியாக இருந்தவர், இந்த பிஸியான செட்யூலிலும் மிக அழகியலான கவிதையான பாடல்களை எழுதியதில் வல்லவர் இவர் என சொல்லலாம்.
இவரை பற்றி சமீபத்தில் பாடகர் க்ரிஷ் ஒருபேட்டியில் அப்படியே மனம் உருகி பேசினார். அதில் அவர் கூறி இருந்தது, மைதிலி என்னை காதலி படத்தில் இடம்பெற்ற ஒரு பொன்மானை நான் காண பாடலை, இந்த பாடலை சிலாகித்தும், டி.ஆர் மாதிரிலாம் ஒரு கவிஞர் பிறந்து வருவார்ங்குறது ரொம்ப கஷ்டம் சார் என அந்த இண்டர்வியூவில் பேசினார், அவர் கோடிட்டு காட்டியது இந்த வரிகளைத்தான்,

