சோசியல் மீடியாவ திறந்தா நாய் நாய்னு நாய் பற்றிய நெகட்டிவ் செய்திகள்தான் வருது, நாமளும் நாயை பத்தி போடுவோம்னுதான் இந்த பதிவு.

இது நாயை பற்றிய பாசிடிவான செய்தி, அதாவது 80, மற்றும் 90களில் மட்டும் அல்லாது இன்று வரை இசை சாதனை படைத்து கொண்டிருப்பவர் இளையராஜா.
இளையராஜாவின் இசையில் பல்வேறுவிதமான பாடல்கள் வந்திருக்கின்றன. இந்த பாடலின் சூழ்நிலை கொஞ்சம் வித்யாசமானது, நாயகன் நாயகி வளர்க்கும் ஒரு நாட்டு நாய்க்கும், ஒரு உயர்தர நாய்க்கும் ஏற்படும் காதல்தான் இந்த பாடல், பாடலின் காட்சியில் வெறும் நாயின் லவ்ஸை மட்டும் காண்பித்தால் தவறாகிவிடும் என்பதால், ராஜீவ், இந்திரா ஜோடிகளை அந்த பாட்டுக்கு காண்பித்து ஒரு ரொமாண்டிக்கா அந்த பாடலை படமாக்கி இருப்பார் இயக்குனர் நட்ராஜ்.
அந்த படம் கடந்த 1985ம் ஆண்டு வெளிவந்த செல்வி படத்தில் இடம்பெற்ற பாடல், அந்த பாடல் இளமனது பல கனவு என்ற பாடல், இந்த பாடலை வாலி எழுத, எஸ்.பி.பி மற்றும் ஜானகி இருவரும் பாடி இருப்பார், நாய்களின் ரொமான்ஸ் மற்றும் ராஜீவ் மற்றும் இந்திராவின் ரொமான்ஸ் காட்சிகளை கலந்து இந்த பாடல் வந்தது ஒரு இனிய பாடல் இது.

