லைவ் சாட் வந்த நடிகை… விர்ஜினா எனக் கேட்ட ரசிகர் – கூலான பதில் !

லைவ் சாட் வந்த நடிகை… விர்ஜினா எனக் கேட்ட ரசிகர் – கூலான பதில் !

மலையாளப் படங்களில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா மேனனிடம் ரசிகர் ஒருவர் அதிக பிரசங்கி தனமான கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார்.

நடிகர் மற்றும் நடிகைகளிடம் சமூகவலைதளங்களில் ரசிகர்கள் ஆபாசமாகவும், அதிக பிரசங்கித் தனமாகவும் கேள்வி எழுப்புவது வாடிக்கையான ஒன்றாக ஆகிவிட்டது. இதைப்போல ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

நடிகை சம்யுக்தா மேனன் உயர் போன்ற மலையாள படங்களிலும் தமிழில் ஜூலை காற்று உள்ளிட்ட படங்களிலும் நடித்தவர். சமீபத்தில் இவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் ரசிகர்களோடு லைவ் சாட் செய்தார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் வெர்ஜினா? என்ற கேள்வியை எழுப்பினார்.

அதற்கு சம்யுக்தா கோபப்படாமல் ‘விர்ஜின், செக்ஸ், ஆல்கஹால் போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்பினால் இந்த காலத்து பெண்கள் பயந்துவிடுவார்கள் என நினைக்கிறீர்ஜளா ? அல்லது இப்படி கேள்வி கேட்டால் மற்றவர்களிடம் இருந்து தனியாகத் தெரிவோம் என்று நினைக்கிறீர்களா?..  பார்த்து பத்திரமாக இருங்கள. யாரவது அடித்துவிட போகிறார்கள்.’ எனக் கூறியுள்ளார்.