உள்ளம் கலங்க வைத்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு

உள்ளம் கலங்க வைத்த பொம்முக்குட்டி அம்மாவுக்கு

நவீன காலத்தில் குழந்தை பிறப்பு என்பது பலருக்கு கஷ்டமான ஒன்றாக இருக்கிறது, மாறிவிட்ட நவீன உலகத்தில் நிறைய குழந்தை பிறப்பை உருவாக்கி தருகிறேன் என நவீன மருத்துவமனைகள் உருவாகி விட்டது. ஒரு குழந்தை பெற்றெடுப்பதற்கு முன் உற்றார், உறவினர்கள் நச்சரிப்பு போன்றவற்றை தாங்கி கொள்வது என்பது கொடூரமானது, அதை விட ஒருவர் குழந்தை இல்லாமல் இருப்பது , ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் எந்த பயனுமில்லை என்பது போன்றதுதான்.

இந்த பொம்மக்குட்டி அம்மாவுக்கு கதையும் அதைத்தான் பேசியது,1983ல் வெளியான எண்டே மம்மட்ட குட்டியம்மாவுக்கு என்ற படம்தான் இளையராஜாவின் பாவலர் கிரியேசன்ஸ் தயாரிக்க பொம்மக்குட்டி அம்மாவுக்கு என்ற பெயரில் வந்தது.

 

தனது குழந்தையை பெர்த்டே பார்ட்டி ஒன்றில் பறிகொடுக்கும் சுகாசினி, சத்யராஜ் தம்பதியினர், ஒரு ஹோம்ல இருந்து இன்னொரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகின்றனர். பழைய சோகத்தை மறந்து வாழ்ந்து வரும் நிலையில், அந்த குழந்தை எங்க குழந்தை என செண்டிமெண்டாக மிரட்டுகிறார் ரகுவரன், அதற்கு ஒரு காரணமும் சொல்கிறார் ரகுவரன், தன் மனைவி மன நோயாளியாக இருப்பதையும் செண்டிமெண்டாக சொல்வதையும், இதை கேட்டு என்ன செய்வது என தெரியாமல் இருதலை கொள்ளி எறும்பாக சத்யராஜ் குடும்பம் தவிப்பதுதான் கதை.

சென் டிமெண்டாக பல காட்சிகளை காண்பித்திருந்தார்கள், பாசத்திற்கு இப்படி எல்லாம் ஏங்குவார்களா என மிக விரிவாக காண்பித்திருந்தார் பாஸில்.

 

இளையராஜா சும்மாவே  நல்ல பாட்டு போடுறவர், சொந்த படம் என்றால் விடுவாரா அவரும் கலக்கி இருந்தார், அனைத்து பாடல்களும் கலக்கி இருந்தார். ஆல்பம் ஹிட் என சொல்லலாம்.

 

ரகுவரன், சத்யராஜ், சுகாசினி, மம்தா மோகன் தாஸ், ரேகா என அனைவரும் கலக்கி இருந்தனர்.  பாசிலின் எல்லா படங்களுக்கும் அதை தமிழுக்கேற்றபடி வசனம் எழுதும் கோகுல கிருஷ்ணன் அழகாக வசனங்களை எழுதி இருந்தார்.