தமிழகத்தில் கொரொனா தாக்கம் அதிகரித்தாலும், இந்நோய்யில் இருந்து குண்மடைந்தோர் எண்ணிக்கை பார்க்கும் பொழுது மனதிற்கு சற்று ஆறுதலாக உள்ளது.
தமிழக அரசு, 144 தடையால் மக்கள் பயன் பெறும் வகையில் நாள்தோறும் பல்வேறு அறிக்கைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் ஏழை எளிய மக்கள் பசியாற சேலத்தில் தமிழக முதல்வர் மகிழச்சியான செய்தி ஒன்றை அறிவித்துள்ளார்.
அதன்படி, சேலத்தில் அம்மா உணவகங்களில் 2 வேளை இலவச உணவு வழங்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர். சேலம் மாநகராட்சியில் நாளை முதல் உணவகங்களில் காலை, மதியம் என இரண்டு வேளை இலவச உணவு வழங்கவுள்ளதாகவும், மாநகராட்சிப் பகுதியில் உள்ள 11 அம்மா உணவகங்களிலும், புற நகரில் உள்ள 4 அம்மா உணவகங்களிலும் 2 வேளை உணவு இலவசமாக பெறலாம் என்றும் இலவச உணவுக்கான செலவை சேலம் மாநகர், புறநகர் மாவட்ட அதிமுக ஏற்கும் என்றும், ஏழை எளிய மக்களின் வயிற்றில் பாலைவாத்த செய்தியை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!