கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் குணமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இயக்குனரின் மகன் குணமானார்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மலையாள இயக்குனர் பத்மநாபனின் மகன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் ஆங்காங்கே சிலர் சிகிச்சையில் குணமாகி வீட்டுக்கு செல்லும் செய்திகள் மட்டுமே மக்களுக்கு ஆறுதலாக உள்ளன. பிரபல மலையாளப்பட இயக்குநர் பத்மகுமார். இவர் மம்முட்டி யுடன் இணைந்து பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய மகன் ஆகாஷ் கடந்த மார்ச் மாதம் பாரீஸில் இருந்து கேரளா திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி இருக்கும்படி விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் வீட்டுத்தனிமையில் அவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட அவருக்கு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் குணமான அவர் நேற்று வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் பத்மகுமார் தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘எங்கள் முதல்வர் பினரயி விஜயன் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா மற்றும் மாவட்ட கலெக்டர் சுகாஸ் ஆகியோர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நமது மாநில அரசு கொரோனாவுக்கு எதிரான போரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருவது எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்’ எனத் தெரிவித்துள்ளார்.