சிம்புவுடன் இணையத் தயார் – திரௌபதி இயக்குனர் அறிவிப்பு!

சிம்புவுடன் இணையத் தயார் – திரௌபதி இயக்குனர் அறிவிப்பு!

திரௌபதி படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்துள்ள இயக்குனர் மோகன் சிம்புவுடன் இணைந்து பணிபுரியத் தயார் எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் வெளியான திரௌபதி படம் சாதியக் கருத்துகளைக் கொண்டிருந்தாக சொல்லப்பட்டாலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 2020 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படங்களில் அனைத்துத் தரப்பினருக்கும் லாபம் கொடுத்த படமாக திரௌபதி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப் பட்ட திரைப்படம் 14 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மார்ச் 19 ஆம் தேதியுடன் திரையரங்குகள் மூடப்பட்டதால் திரௌபதி படத்தின் காட்சிகள் முடிவுக்கு வந்தன. இந்நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனரின் அடுத்தப் படம் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மோகன் ஜி தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷிதான் நடிக்கிறார் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் டிவிட்டரில்,’ சிம்புவுடன் இணைந்து நீங்கள் ஒரு திரைப்படம் எடுத்தால் மாஸாக இருக்கும். நீங்கள் தான் தைரியமான இயக்குநர்… அதுபோல சிம்புவும் தைரியமான இயக்குனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரசிகருக்குப் பதிலளித்த இயக்குனர் மோகன் ‘ சிம்பு ரெடின்னா நானும் ரெடி. என்னுடைய அடுத்த படத்தை முடித்துவிட்டு சிம்புவிடம் செல்வேன்’ எனக் கூறியுள்ளார்