- Homepage
- cinema news
- அசால்ட் பண்ணப்போற அமீர்!.. வாடி வாசல்ல துள்ளிக்கிட்டு வரப்போகும் ஜல்லிக்கட்டு காளை இவராமே?…
அசால்ட் பண்ணப்போற அமீர்!.. வாடி வாசல்ல துள்ளிக்கிட்டு வரப்போகும் ஜல்லிக்கட்டு காளை இவராமே?…
‘வரும், ஆனா வராது’, இது வடிவேலு நகைச்சுவை காட்சியில் வரக்கூடிய ஒரு வசனம். இந்த வசனத்தை தான் கொஞ்ச நாளா சூர்யாவோட ரசிகர்கள் அதிகமா சொல்லிட்டு இருந்தாங்க. அதுக்கு காரணம் என்ன அப்படீன்னு பார்த்தா வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என சொல்லப்பட்டு வரும் “வாடிவாசல்” படத்தை பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வராததுனால தான்.
படம் வருமா?, வராதா?. சூர்யா நடிப்பாரா?, மாட்டாரா? என்ற குழப்பத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்கள் அவருடைய ரசிகர்கள். இப்படி ஒரு பக்கம் படம் வரும், வராதுன்னு வந்த வதந்திகளுக்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்கின்ற மாதிரி அமீர் திடீர்ன்னு அதிகாரப்பூர்வமா ஒரு அறிவிப்பை இன்றைக்கு வெளியிட்டுருக்கிறாரு.
“வாடி வாசல்” படத்தில் சூர்யாவுடன் மோத போகும் வில்லன் இவரே தானாம். “மௌனம் பேசியதே” படத்திற்குப் பிறகு சூர்யாவும் இவரும் வெகு ஆண்டுகள் கழித்து இணைய உள்ளார்கள் என்ற ஒரு இனிப்பான செய்தியும் சூர்யா ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. “மௌனம் பேசியதே” படம் சூர்யா வளர்ந்து வந்த நேரத்தில் வெளியானது. சூர்யாவை இந்த படத்தில் வித்தியாசமாக காட்டி, அதோடு அவரின் வளர்ச்சிக்கும் காரணமாக இருந்தார் அமீர்.
வில்லன் இவர் தான் கன்ஃபர்ம் ஆனதுக்கு அப்புறம் இனி கவலை எதற்கு?. படம் இப்படி வருமா?, அப்படி வருமா? இந்த படம் மாதிரி ஹிட் ஆகுமா?, இல்ல அந்த படம் மாதிரி சூப்பர் ஹிட் ஆகுமா? என்கிற யோசனை மட்டும் தான் சூர்யா ரசிகர்களுக்கு இருக்கிற மாதிரி தான் சீன் அமைஞ்சிருக்கு இன்றைக்கு.