அங்க ரைடு போகாதீங்க… தினாவின் பேச்சு ! விஜய்யின் ரியாக்‌ஷன் !

அங்க ரைடு போகாதீங்க… தினாவின் பேச்சு ! விஜய்யின் ரியாக்‌ஷன் !

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் சமீபத்தில் நடந்த வருமான வரி சோதனை பற்றி தினா பேசியது கவனத்தை ஈர்த்தது.

விஜய்யின் 64 ஆவது படமாக உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடந்தது. இதில் ரசிகர்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படாமல் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொண்டனர்.

விழாவில் கலக்கப்போவது யாரு புகழ் தினாவின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.  சமீபத்தில் ஈசிஆர்-ல் உள்ள விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் இரு முறை வருமான வரி சோதனை நடந்தது பற்றி பேசினார். அவரது பேச்சில்  ‘இளைஞர்களுக்கு ஒன்னு மட்டும் சொல்லிக்கிறேன். இப்ப எல்லார் கைலயும் பைக் இருக்கு. ஈ சி ஆர் ரோடு காலியாதான இருக்குன்னு அங்க அடிக்கடி ரைடு போகாதீங்க…. நான் சொல்றது பைக் ரைட பத்தி’ என வருமான வரித்துறையினரை கேலி செய்யும் விதமாகப் பேசினார். தினாவின் இந்த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த விஜய் வாய்விட்டு சிரித்தார்.