பாலச்சந்தர் பல வித்யாசமான கதைகளை கொடுத்தவர் திரையுலகத்துக்கு பொக்கிஷமானவர் என சொல்லலாம். இவரின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம்தான் மூன்று முடிச்சு.
இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.1976ம் ஆண்டு தீபாவளியை ஒட்டி இப்படம் வெளியானது.
ஒரு பெண்ணை இருவர் காதலிக்கிறார்கள், அவர்களில் ஒருவரைத்தானே ஒரு பெண் காதலிக்க முடியும், அவருக்கு மனதுக்கு நெருக்கமான கமலை ஸ்ரீதேவி காதலிக்கிறார், இது ரஜினிகாந்துக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
இதனால் மூவரும் சேர்ந்து படகில் ஜாலியாக செல்வது போல் செல்வோம் என கூறி, கமல்ஹாசனை தண்ணீருக்குள் தள்ளிவிட்டு விடுகிறார், இதன் பின் என்ன நடக்கிறது என்பது கதை.
இப்படம் கே.விஸ்வநாத் இயக்கத்தில் தெலுங்கில் எடுக்கப்பட்ட ஓ சீத கதா என்ற படத்தின் மறு உருவாக்கமாகும். மலையாளத்திலும் இப்படம் மாட்டாரு சீதா என்ற படத்தில் கமல்ஹாசன் நடிக்க 1975ல் இப்படம் வந்தது, மலையாளத்தில் கமல் வில்லன்.
இதற்கு பிறகுதான் 1976ல் தமிழில் இப்படம் வந்தது. எம்.எஸ்.வி இசையில் வசந்த கால நதிகளிலே பாடல் என்றும் இனிமையான பாடல் ஆகும்.

