cinema news
கொரோனாவால் பலியான பிரபல நகைச்சுவை நடிகர் – ரசிகர்கள் சோகம்!
ஜப்பானைச் சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா கொரொனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
உலகம் முழுவதும் வீட்டுக்குள் அடக்கிப் போட்டுள்ளது கொரோனா என்னும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் கிருமி. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதில் அரசியல்வாதிகள் மூலம் சினிமா பிரபலங்கள் வரை அனைவரும் அடங்குவர்.
இந்நிலையில் ஜப்பானைச் சேர்ந்த சேர்ந்த பிரபல நகைச்சுவை நடிகரான கென் ஷிமுரா நேற்று கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 70 வயதாகும் அவருக்கு கொரோனா தொற்றோடு நிமோனியாவும் இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என சொல்லப்படுகிறது.
‘தி ட்ரிஃப்டர்ஸ்’ எனப்படும் ராக்பேண்ட் குழுவிலும், ‘பாஹா டொனோஸாமா’ மற்றும் ‘ஹென்னா ஓஜிஸான்’ நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அவர் ஜப்பானில் தனது நகைச்சுவைகளின் மூலம் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.