cinema news
அடிச்சி தூக்கிய சூரி!…இத்தனை கோடி கலெக்சனா?…வேற லெவெல் தான் போங்க!…
சூரி கதாநாயகனாக நடித்து நேற்று வெளியான “கருடன்” படம் நல்ல வரவேற்பை பெற்றுளது. வெற்றி மாறனின் கதையை துரைன் செந்தில்குமார் இயக்கியுள்ளார். சசிக்குமார், உன்னி முகுந்தன் சூரியுடன் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் வெளிவந்துள்ளது படம்.
படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுவது சூரியின் நடிப்பே. “விடுதலை” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறிவிட்ட சூரி, “கருடன்” படத்தில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார் நடிப்பில்.
இனி காமெடி நடிகராக அவரை எங்களால பார்க்க முடியாது, தமிழ் சினிமாவிற்கு மேலும் ஒரு தரமான ஹீரோ கிடைத்துவிட்டார் இப்படி யெல்லாம் ரசிகர்கள் சூரியை கொண்டாடி வருகின்றனர்.
படத்தின் வசூலும் எதிர்பார்த்ததை போலவே இருந்து வருவது படக்குழுவை மேலும் மகிழவைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 4.65 கோடி, இந்தியா முழுவதும் அயல் நாட்டு ரிலீஸ் மொத்தமாக சேர்த்து பார்த்தால் முதல் நாள் கலக்சன் ஐந்து கோடியே நாற்பது லட்ச ரூபாய் என சொல்லப்படுகிறது.
இன்றும், நாளையும் விடுமுறை தினங்கள் என்பதனால் படத்தின் வசூல் மெலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளியான படங்களோடு ஒப்பிட்டுப்பார்த்தால் “கருடன்” அதிகமான வசூலைப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிப்-ஆப் தமிழா ஆதி நடிப்பில் வந்துள்ள “பி.டி.சார்” படம் இதுவரை மொத்தமாக 15கோடி ரூபாய் வரை வசூலிதுதுள்ளதாகவும், அதே போல கவின் நடிப்பில் வெளியான “ஸ்டார்” படத்தின் வசூல் இதுவரை 29 கோடிவரை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
சூரியின் “கருடன்” விரைவில் இந்த வரிசையில் முதலிடத்தை பிடிக்கலாம் என சொல்லப்படுகிறது. கருடன் படத்தின் கதையை கேட்ட பிரபலங்கள் பலரின் இதில் நடிக்க ஆசைப்பட்டிருந்தாலும் சூரியை வைத்து தான் எடுக்க வேண்டும் என எடுக்கப்பட்ட தீர்மானமான முடிவே சூரியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றுள்ளது.