கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மருந்து – சீனாப் பரிந்துரை !

கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மருந்து – சீனாப் பரிந்துரை !

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஜப்பானின் Favipiravir என்ற மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீன அரசு பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்புக் கண்டுபிடிக்கப்பட்டு இது மூன்றாவது வாரம் . இதுவரை கிட்டத்தட்ட 150 பேர் வரைப் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் நாட்கள் வைரஸ் பரவலைத் தடுக்கவேண்டிய முக்கியமான நாட்கள். அதனால் அத்தியாவசியத் தேவைகள் தவிர மற்றவற்றுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என வற்புறுத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டு பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய கொரோனா இப்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் ஜப்பானைச் சேர்ந்த நிறுவனத்தின் கண்டுபிடிப்பான Favipiravir  என்ற இந்த மருந்தை எடுத்துக்கொண்டவர்களில் 340 பேர் முழுவதும் குணமடைந்துள்ளதாகவும், சாப்பிட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சீன அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.