வலிமையைக் கிடப்பில் போட்டு அடுத்த படத்தை தயாரிக்கிறாரா போனி கபூர்?

வலிமையைக் கிடப்பில் போட்டு அடுத்த படத்தை தயாரிக்கிறாரா போனி கபூர்?

அஜித்தின் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தமிழில் அடுத்து ஒரு படம் தயாரிக்க இருக்கிறார்.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்படத்தை இயக்கிய வினோத்தே அடுத்த அஜித் படத்தையும் இயக்குகிறார். இப்படத்தையும் போனிகபூரே தயாரிக்கிறார். இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் செய்யும் காவல் அதிகாரியாக அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்நிலையில் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்ததாக ஒரு படத்தைத் தயாரிக்க இருக்கிறார். அதில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க அருண்ராஜா காமராஜா இயக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு இந்த படத்தை அவர் தயாரிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரிக்க இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.