கொரோனா பீதி… ஜூன் மாதம் வரை தியேட்டர்கள் மூடல் !

கொரோனா பீதி… ஜூன் மாதம் வரை தியேட்டர்கள் மூடல் !

உலகெங்கும் கொரோனா பீதி அதிகமாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் மே இறுதிவரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் 470 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் தங்கள் மக்களை வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ள சொல்லியுள்ளது. இதையடுத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கேளிக்கைத் தளங்கள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் வைரஸ் பரவலை முழுவதுமாக தடுக்கும் விதமாக ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகிய நாடுகள் மே இறுதி வரை அதாவது இன்னும் 8 வாரத்துக்கு திரையரங்குகளை மூடுவதாக அறிவித்துள்ளன.