கொரொனாவுக்கு எதிராக பணிபுரியும் நிஜ ஹீரோக்களான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் 7.5 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் அர்னால்டு.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,00,000 ஐ நெருங்கி வருகிறது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 50,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.
இப்போது இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,36,000 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 5,0000க்கும் மேலுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அமெரிக்க அரசு தள்ளாடி வருகிறது. இந்த நோய்க்கு எதிராக போராடிவரும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு உதவும் வகையில் ஹாலிவுட் நடிகரும் முன்னாள் ஆளுநருமான ஆர்னால்ட் ஸ்வாஸ்நேகர் ஒரு மில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளார்.
இது சம்மந்தமாக அவரது பதிவில் ‘வீட்டில் இருந்துகொண்டு குற்றம் சொல்வதில் எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை. அதனால் நமது நிஜ ஹீரோக்களான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பதற்கான எளிய வழியில் நானும் பங்கெடுத்துகொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.