மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் மார்ஃப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஹேக்கர்களை அவர் கோபமாக விமர்சனம் செய்துள்ளார்.
நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. அதன் பின் தமிழில் தனுஷ் ஜோடியாக கொடி படத்திலும் நடித்தார். அந்தப் படம் பெரிதாக வெற்றிப் பெறவில்லை என்றாலும் இப்போது தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வரும் இவர் கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவுடன் இருப்பவர்.
இந்நிலையில் இவரது புகைப்படத்தை ஆபாசமாக மார்ப் செய்த சிலர் சைபர் குற்றவாளிகள் அந்த புகைப்படத்தை அவரது முகநூல் கணக்கை ஹேக் செய்து அதில் இருந்தே அப்லோட் செய்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான அனுபமா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவைத் தன்னுடைய புகைப்படங்கள் இல்லை என மறுத்துள்ளார்.
மேலும் ‘இந்த புகைப்படம் ஃபேக் என்பது உங்களுக்கே தெரியும். எப்படி இந்த இது போன்ற முட்டாள்தனத்துக்கெல்லாம் நேரம் கிடைக்கிறதெனத் தெரியவில்லை. உங்கள் வீட்டில் அம்மா-தங்கை இல்லையா? உங்களது நேரத்தை கொஞ்சமாவது உபயோகமாக பயன்படுத்துங்கள்’ எனத் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.