ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கால் இண்டர்நெட் ஹேங்க் ஆகுமா? அமேசான் ப்ரைம் அதிரடி அறிவிப்பு!

ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையில்லா சேவை வழங்கும் பொருட்டு அமேசான் ப்ரைம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 4,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

இதனால் மக்கள் முழுவதும் வீட்டுக்குள் முடங்கியுள்ளதால் அதிகளவில் பொழுதுபோக்கிற்காக இணையத்தையே நம்பியுள்ளனர். ஒரே நேரத்தில் பலரும் இணையத்தை பயன்படுத்தும் பொருட்டு ஹேங்க் ஆகாமல் இருக்க, அமேசான் ப்ரைம் நிறுவனம், தங்கள் வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 14 வரை எச்டி தரத்திலான வீடியோக்களைப் பார்க்க முடியாது என அறிவித்துள்ளது.

இதுகுறித்து தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘தவிர்க்க முடியாத சூழல்களால் நெட்வொர்க் தடையைக் குறைக்க விரும்புகிறோம். அதனால் ஏப்ரல் 14-ம் தேதி வரை செல்போன்களில் எஸ்டி குவாலிட்டியில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளது.