---Advertisement---

திருமணம் எல்லாம் இல்லை… அது வேறு இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் –அமலா பால் தரப்பு விளக்கம் !

By Vino
Published on: March 21, 2020
---Advertisement---

நடிகை அமலா பாலுக்கு திருமணம் ஆகிவிட்டதாக நேற்று வெளியான செய்திகளுக்கு அவர் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பின்னர் வெளியான மைனா படம் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் முன்னணி கதாநாயகர்களோடு அவர் நடிக்க முன்னணி கதாநாயகியாக  வலம் வந்தார். பின்னர் இயக்குனர் கிரீடம் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்ட அவர் ஓராண்டில் அவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் நடித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இந்நிலையில் அவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் புவனீந்தர் சிங் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது திடீரென அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக புகைப்படத்தை வெளியிட்ட புவனீந்தர் அதை சில நிமிடங்களில் நீக்கியுள்ளார். இதையடுத்து அமலாதரப்பிலும் அந்த புகைப்படங்கள் மும்பையில் நடந்த ஒரு ஈவண்ட்டில் எடுக்கப்பட்டதாகவும் அதை ஏன் பாவ்னீந்தர் பகிர்ந்தார் எனத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now