பாடகரை இரண்டாவதாக மணந்த அமலா பால் – வைரலாகும் புகைப்படம் !

பாடகரை இரண்டாவதாக மணந்த அமலா பால் – வைரலாகும் புகைப்படம் !

நடிகை அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலா பால், அதன் பின்னர் வெளியான மைனா படம் மூலம் கவனம் ஈர்த்தார். அதன் பின்னர் முன்னணி கதாநாயகர்களோடு அவர் நடிக்க முன்னணி கதாநாயகியாக  வலம் வந்தார்.

பின்னர் இயக்குனர் கிரீடம் விஜய்யை காதல் திருமணம் செய்துகொண்ட அவர் ஓராண்டில் அவரைப் பிரிந்து விவாகரத்து பெற்றார். அதன் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய அமலா பால் சமீபத்தில் ஆடை படத்தில் நடித்து சர்ச்சைகளைக் கிளப்பினார்.

இந்நிலையில் அவர் மும்பையைச் சேர்ந்த பாடகர் புவனீந்தர் சிங் காதலித்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது திடீரென அவரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இது சம்மந்தமாக புகைப்படத்தை வெளியிட்ட புவனீந்தர் அதை சில நிமிடங்களில் நீக்கியுள்ளார்.