நடிகரை அழகான பெண் என சொல்லிய நெட்பிளிக்ஸ் – விடுவார்களா ரசிகர்கள்!

நடிகரை அழகான பெண் என சொல்லிய நெட்பிளிக்ஸ் – விடுவார்களா ரசிகர்கள்!

நடிகர் அல்லு அர்ஜுனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதாக உளறிய நெட்பிளிக்ஸ் இந்தியாவை ரசிகர்கள் வைத்து செய்ய ஆரம்பித்துள்ளனர்.

அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் நேற்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதையடுத்து முதன் முதலாக அவர் தமிழ் உள்ளிட்ட 5  மொழிகளில் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதையடுத்து அனைவரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நெட்பிளிக்ஸ் தன் பங்குக்கு வாழ்த்து சொல்லி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா பிரிவின் ட்விட்டர் பக்கத்தில் ‘இந்த அழகான புட்டா பொம்மாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்’ எனக் கூறியிருந்தது. புட்ட பொம்மா என்பது அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியானப் படத்தில் இடம்பெற்றிருந்த பாடலின் வரியாகும். ஆனால் புட்ட பொம்மா என்றால் அழகான பெண் என்று அர்த்தமாகும்.

இந்நிலையில் அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதனால் கோபமாகி நெட்பிளிக்ஸுக்கு எதிராக பதிவுகளைப் பரப்ப உடனே அவர்கள் அந்த பதிவை நீக்கிவியுள்ளது நெட்பிளிக்ஸ்.