தனி ஒருவனில் அரவிந்த்சாமி நடித்திருந்த சித்தார்த் அபிமன்யுவின் கதாபாத்திரத்தில் நடிக்க அஜித்தான் முதல் தேர்வாக இருந்தார் என இயக்குனர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார்.
‘ஜெயம்’ படம் மூலம் தமிழில் இயக்குனராக ராஜா வரிசையாக ரீமேக் படங்களாக இயக்கியதால் ஒரு கட்டத்தில் ரீமேக் ராஜா என்ற ரசிகர்களால் கேலி செய்யப்பட்டார். ஆனால் அவர் இயக்கிய தனி ஒருவன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று அவரைத் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாற்றியது.
அந்த படத்தில் கதாநாயகனாக நடித்த ஜெயம்ரவியை பாராட்டுகளைப் பெற்றது வில்லனாக நடித்த அரவிந்த் சாமிதான். சித்தார்த் அபிமன்யூ என்ற கதாபாத்திரம் இன்றும் தமிழ் சினிமாவின் வில்லன் கதாபாத்திரங்களில் சிறந்த ஒன்றாக இருந்து வருகிறது. இந்த படம்தான் அரவிந்த் சாமிக்கு ரீ எண்ட்ரியாக அமைந்தது. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த இயக்குனர் மோகன் ராஜா ‘முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க அஜித்தைதான் நினைத்து இருந்தேன். எல்லோரும் அவர் சிறப்பாக பொருந்துவார் எனக் கூறினர். ஆனால் என்னால் அதை செயல்படுத்த முடியவில்லை. அதே நேரத்தில் சுதீப் மற்றும் மேலும் சில நடிகர்கள் கூட மனதில் வந்தனர்’ எனக் கூறியுள்ளார்.