Ajith Birthday 2019

அஜித் கொடுத்த 1.25 கோடி ரூபாய்! சமூகவலைதளங்களில் குவியும் பாராட்டு!

கொரோனா நிவாரண நிதியாக நடிகர் அஜித் மத்திய மற்றும் மாநில மற்றும் சினிமா அமைப்புகளுக்கு மொத்தமாக 1.25 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 4300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொழில்கள் அனைத்தும் முடங்கியதால் கடுமையான பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா நிவாரணத்துக்காக மக்களிடம் நிதியுதவி கேட்டுள்ளன.

இதையடுத்து தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள் நிதி கொடுத்து வரும் தமிழ் நடிகர் அஜித் 1,25 கோடி ரூபாய் நிதியாக அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த தொகையை மூன்றாக பிரித்தும் 50 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும், 50 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கும், 25 லட்சத்தை சினிமா தொழிலாளர்கள் நிவாரணத்துக்காகவும் அவர் கொடுத்துள்ளார். இதுவரை தமிழ் சினிமா நடிகர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்காத நிலையில் அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.