பரபரப்புகளுக்கு பஞ்சம் வைக்காதவரான ஸ்ரீரெட்டி தனது முன்னழகைப் பற்றி புகைப்படம் ஒன்று போட்டு விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பலர் தன்னை பாலியல் ரீதியாக உபயோகப்படுத்திக் கொண்டு விட்டதாக அரைநிர்வாணப் போராட்டம் செய்து பரபரப்புகளைக் கிளப்பியவர் தெலுங்கு துணை நடிகர் ஸ்ரீரெட்டி. அது மட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ், முருகதாஸ் உள்ளிட்ட தமிழ் திரையுலகினர் மீதும் பாலியல் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. அதன்பின் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கொடுப்பதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
இதையடுத்து சென்னையில் தங்கி கொண்டு சில தமிழ் படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையானப் புகைப்படங்களை வெளியிடுவதும், இரட்டை அர்த்த கருத்துகளை தெரிவிப்பதுமாக ஜாலியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று தனது செல்பி ஒன்றை பதிவிட்ட அவர் ‘என்னுடைய முன்னழகு செயற்கையாக காட்டப்படுவது அல்ல. என்னுடைய தொடர் உடற்பயிற்சியால் மேலே எழுப்பப்பட்டது. உங்களுடைய தன்னம்பிக்கையையும் மேலே எழுப்புங்கள்’ எனக் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.