உதவியாளருக்காக சமந்தா செய்த செயல் – ரசிகர்கள் வியப்பு !

உதவியாளருக்காக சமந்தா செய்த செயல் – ரசிகர்கள் வியப்பு !

நடிகை சமந்த தனது உதவியாளரின் புதிய உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவுப் பரிமாறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

நாக சைதன்யாவுடனான திருமணத்துக்குப் பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போடாமல் தீவிரமாக படங்களில் நடித்து வருகிறார் சமந்தா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ஜானு திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. நடிப்பு தாண்டி தனது நல்மனதுக்காக அதிகமாக அறியப்படுபவர் சமந்தா.

இப்போது சமந்தா செய்துள்ள ஒரு செயலானது அவரது நற்பண்பை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. சமீபத்தில் தனது உதவியாளர் ஆர்யன் புதிதாக திறந்துள்ள ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவவில் அவர் கலந்துகொண்டார்.

ஏதோ வந்தோம் கலந்துகொண்டோம் என்று இல்லாமல் அங்கு வந்திருந்தவர்களுக்கு என்ன உணவு வேண்டும் எனக் கேட்டு அவரே இறங்கி பரிமாறியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது சமம்ந்தமான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகின்றன.