cinema news
சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு… 4 வருடங்களுக்கு பிறகு… நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு…!
தமிழ் சினிமாவில் பிரபல சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் விஜே சித்ரா. ஆரம்பத்தில் விஜே-வாக தனது பணியை தொடங்கிய சித்ரா, அதன்பிறகு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதிலும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்த அசதி வந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் நசரத் பேட்டையில் இருக்கும் நட்சத்திர விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் எனக் கூறி அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சித்ரா மரணத்தில் ஹேம்நாத் மீது சந்தேகம் இருப்பதாக சித்ராவின் குடும்பத்தினரும் புகார் கொடுத்திருந்தார்கள். இதையடுத்து சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் மற்றும் 7 பேரும் கைது செய்யப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்குக்கான தீர்வு வழங்கப்பட்டது. அதன்படி சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கில் அவரது கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்து திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கின்றது.
மேலும் கணவர் ஹேம்நாத் மற்றும் ஏழு பேருக்கும் சித்ரா வழக்கில் எந்த தொடர்பும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான சாட்சியங்கள் எதுவும் இல்லை, முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்களை விடுதலை செய்து நீதிபதி ரேவதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.