டல்கோனா காபி எப்படி செய்யலாம் ஹீரோயின்ஸ் வீடியோஸ்.
இந்தியாவே கொரோனா பிடியில் சிக்கி நொடிக்கு நொடி அச்சம் கலந்த மரண பீதியில் அனைவரும் உறைந்து போய் உள்ளோம். மேலும் இந்த நோய் பரவாமல் தடுக்க நம் இந்திய அரசு வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்ற வாசகத்தை சொல்லிக்கொண்டு வருகிறது. ஆனால் வீட்டிலேயே முடங்கி இருப்பது நமக்கு மிகவும் போர்டிரத்தாலும் கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க நமக்கு வேறு வழியும் இல்லை.
சாதாரண மக்களுக்கே இப்படி இருக்கும்போது, தினமும் திரையில் தோன்றும் பிரபலங்களை நினைத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் திரைத்துறையினர் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால், இப்போது நெட்டிசன்களுக்கு பல்வேறு கன்டென்ட் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை வாணி போஜன் சோஷியல் மீடியா மூலம் பிரபல காப்பித்தூள் நிறுவனத்திற்கு விளம்பரம் செய்து வருகின்றார். அதில் என்ன விசேஷம் என்றால் டல்கோனா காபி எப்படி செய்யலாம்? என்று ஆரம்பிக்கும் அந்த வீடியோ ப்ரூ காபி தூளை வைத்து எளிமையாக தயாரிக்கலாம் என்று முடிந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் என்ன ப்ரு விளம்பரமா? என்று கேட்க இன்னும் பலர் ஏன் அக்கா நெஸ்கேபி, சன்ரைஸ் காபி தூளை கூட வச்சு ட்ரை பண்ணலாமே என்றும் ஐடியா கொடுத்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/B-lv–bJtOU/?utm_source=ig_embed&utm_campaign=loading
https://www.instagram.com/p/B-j7XjuAOSm/?utm_source=ig_embed&utm_campaign=loading

