எந்திரன் மேடையில் என்னுடைய பேச்சை வடிவேலு தவறாக நினைத்துக் கொண்டார் ! விவேக் ஓபண்டாக் !

எந்திரன் மேடையில் என்னுடைய பேச்சை வடிவேலு தவறாக நினைத்துக் கொண்டார் ! விவேக் ஓபண்டாக் !

எந்திரன் திரைப்படத்தின் மேடையில் விவேக் வடிவேலுவைப் பற்றி ஜாலியாக பேசியதை அவர் தவறாக எடுத்துக் கொண்டார் என சொல்லியுள்ளார்.

நடிகர்கள் விவேக்கும் வடிவேலுவும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக படங்களில் நடித்தனர். ஆனால் அதன் பின்னர் தனித்தனியாக நடித்து தங்களுக்கான பாணிகளை உருவாக்கிக் கொண்டனர். இந்நிலையில் நடிகர் விவேக் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் தனக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான நட்புப் பற்றி பேசியுள்ளார்.

அப்போது தொகுப்பாளர் உங்களுக்கும் வடிவேலுவுக்கும் இடையில் ஏதாவது பிரச்சனை எழுந்துள்ளதா எனக் கேட்டபோது ‘எங்கள் இருவருக்குமான பாணி வேறு வேறு. அதனால் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் எழுந்ததில்லை. ஆனால் நாங்கள் இருவரும் இருந்த மேடையில் அவர் பேசியதும் ‘நல்லா பேசறியா… நேத்து நைட்டே எழுதி வச்சுட்டியா?’ எனக் கேட்டேன். அதை மட்டும் அவர் தவறாக நினைத்துக்கொண்டார் என நினைக்கிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

விவேக் சொல்லும் அந்த மேடை எந்திரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா. அந்த விழாவை விவேக் தொகுத்து வழங்க, வடிவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.