cinema news
சங்க பணம் முறைகேடு… நடிகர் விஷாலை வைத்து படம் எடுக்க தடையா..? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி..!
சங்க பண முறைகேடு விவகாரம் தொடர்பாக விஷாலை வைத்து படம் எடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவர் தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த போது சங்கத்தில் பணத்தில் முறைகேடு செய்ததாக விமர்சனம் இருந்தது.
இதனால் நடிகர் விஷாலுக்கு எதிராக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இனி விஷாலை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சங்கத்திலிருந்து முறைகேடாக 12 கோடி செலவழித்த தொகையை திரும்ப அளிக்கும்படி பலமுறை கூறியும் இதற்கு விஷால் உரிய பதிலளிக்கவில்லை. இதனால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் விஷால் நடிக்கும் புதிய படங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து அறிவித்துள்ளது.