பிரசாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அந்தகன் திரைப்படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவின் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர் பிரசாந்த். திரை துறையில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கின்றார். இவர் நடிப்பில் கடந்த 2021 முதல் 22 காலகட்டத்தில் எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம் அந்தகன்.
இந்த திரைப்படத்தை அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் எடுத்து முடிக்கப்பட்டு இரண்டு வருடங்களான நிலையில் இப்படம் வெளிவராமல் இருந்துள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் அந்தகன் படத்தின் தீம் பாடலை நடிகர் விஜய் வரும் 24ஆம் தேதி வெளியிடுவார் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படப் பாடலை அனிருத் மற்றும் விஜய் சேதுபதி பாடியிருக்கிறார்கள். இதைதான் நடிகர் விஜய் வெளியிடப் போகின்றார் .
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் கோட் திரைப்படத்தில் விஜய் மற்றும் பிரசாந்த் இருவரும் இணைந்து நடித்திருப்பார்கள். தங்களுக்குள் இருந்தான் நட்பு காரணமாக பிரசாந்தின் இந்த திரைப்படப் பாடலை வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டிருக்கின்றார் நடிகர் விஜய்.