தற்கொலை செய்து கொள்ள இருந்த நடிகரைக் காப்பாற்றிய பிரகாஷ்ராஜ் – முன்னணி நடிகர் தகவல் !

தற்கொலை செய்து கொள்ள இருந்த நடிகரைக் காப்பாற்றிய பிரகாஷ்ராஜ் – முன்னணி நடிகர் தகவல் !

மூத்த நடிகர் ஒருவர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ள இருந்த நிலையில் அவரை அதிலிருந்து மீட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பலமொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் பிரகாஷ்ராக். சமீபகாலமாக சினிமாவை விட அரசியலில் ஆர்வம் காட்டி நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ராஜா ரவீந்தர் பிரகாஷ்ராஜைப் பற்றி ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். அவரது பேச்சில் ‘முன்னணி நடிகர் ஒருவர் ரூ.50 லட்சம் ரூபாய் கடன் தொல்லையால் தற்கொலை வரை சென்றார். அவரைப் பற்றி அறிந்த பிரகாஷ்ராஜ் அந்த நடிகரை உடனடியாக அழைத்து பிரச்சனையப் பற்றி கேட்டு அந்த கடனை அடைத்தார். அதன் பின்னர்தான் அந்த நடிகர் அந்த தற்கொலையில் இருந்து மீண்டார்.’ எனக் கூறினார்.