cinema news
கொத்து கொத்தாக செத்து கிடந்த மக்கள்… ஓடி வந்து உதவி செய்த சியான் விக்ரம்…!
கேரளா மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி ஏகப்பட்ட மக்கள் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் அதைத் தொடர்ந்து மீண்டும் 4.30 மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவு இரண்டையும் சேர்த்து 500 குடும்பங்களை சேர்ந்த 1500 க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்தனர்.
இதில் ஏராளமானோர் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலச்சரிவின் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரித்து இருக்கின்றது. மேலும் 250 பேர் நிலை என்ன என்பது தெரியவில்லை. தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் இன்று காலை ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டு இருந்தார்.
அதில் கேரள முதல்வர் பினராய் விஜயன் நிவாரண நிதி மூலமாக மக்கள் தங்களால் முயன்ற உதவியை செய்ய வேண்டும். அது சிறிய தொகையாக இருந்தாலும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் கேரள முதல்வர் பொது நிவாரண நிதிக்கான வங்கி கணக்கு என்ற எண்ணில் நீங்கள் நிதி உதவி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து ஏராளமானோர் தொடர்ந்து உதவிகள் செய்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தமிழ் சினிமா சார்பாக நடிகர் சியான் விக்ரம் முதல் ஆளாக 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கின்றார். இது தொடர்பான செய்தி இணையத்தில் வைரலாகி வருகின்றது.