ஆடி காரில் சீறிப்பாய்ந்த அஜித்… 234 கிலோ மீட்டர் வேகம்… வைரலாகும் வீடியோ…!

ஆடி காரில் சீறிப்பாய்ந்த அஜித்… 234 கிலோ மீட்டர் வேகம்… வைரலாகும் வீடியோ…!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். சினிமாவை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். அவரின் தற்போதைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அஜித் குமார் அவரின் ஆடி காரில் 234 கிலோ மீட்டர் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரின் வீடியோவுக்கு லைக் அள்ளி குவித்து வருகிறார்கள். நடிகர் அஜித் தற்போது கைவசம் இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கின்றார். ஒன்று விடா,முயற்சி இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது என்று கூறப்படுகின்றது.

ஆனால் படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் வெளியாகவில்லை. மற்றொன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம். இந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகர் அஜித் பிஸியாக நடித்து வருகின்றார்.