பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை

பிக்பாஸில் கலந்து கொள்ள எனக்கெல்லாம் தகுதி இல்லை – கோபத்தில் நடிகை

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தனக்கெல்லாம் அனுமதி இல்லை என நடிகை ஷாலு ஷாமு விரக்தியிடன் தெரிவித்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக நடித்தார். மேலும், பல திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் தனது நண்பருடன் கவர்ச்சியான உடை அணிந்து நடனமாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரசிகர் ‘பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க.. உங்களுக்கும் ஆர்மி ஆரம்பிக்கிறோம்’ என ரசிகர் கூற, அதுக்கெல்லாம் தகுதி வேண்டுமாம். அந்த தகுதி எனக்கு இல்லையாம்’ என விரக்தியுடன் ஷாலு ஷாமு பதிலளித்துள்ளார்.