ரசிகர்கள் தயாராக இருக்கவும்! பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள்..

225
ரசிகர்கள் தயாராக இருக்கவும்! பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள் 01

பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல உள்ள சில நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

ரசிகர்கள் தயாராக இருக்கவும்! பிக்பாஸ் வீட்டில் கவர்ச்சி நடிகைகள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது. இந்நிலையில், நடிகை பூனம் பாஜ்வாவும், 90 எம்.எல். படத்தில் நடித்த ஸ்ரீகோபிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆனால், விஜய் டிவி இதுவரை போட்டியாளர்கள் குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிலை.  பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஜூன் 23ம் தேதி ஒளிபரப்பாகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

பாருங்க:  இதனால்தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் - உண்மையை உடைத்த மதுமிதா