கமல்ஹாசன் நடத்தவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது. இந்த முறை மற்ற மொழிகளில் கடைபிடிக்கப்படுவது போல திருநங்கைகள் சிலரை களம் இறக்கலாம் என கமல்ஹாசன் ஐடியா கொடுத்தாராம். இதைத் தொடர்ந்து சிங்கப்பூரை சேர்ந்த ஷாக்ஷி ஹரேந்திரன், தர்மதுரை ஜீவா, அருவி அஞ்சலி என சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில், யார் உள்ளே செல்வார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.