களம் இறங்கும் சாக்ஷி ஹரேந்திரன் – களைகட்டப் போகும் பிக்பாஸ் சீசன் 3

258
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி

விரைவில் ஒளிபரப்பாகவுள்ள தமிழ் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் சிங்கப்பூரை சேர்ந்த சாக்‌ஷி ஹரேந்திரன் பங்கு பெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போட்டியாளராக சிங்கப்பூரை சேர்ந்த திருநங்கை சாக்‌ஷி ஹரேந்திரன் இருக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இவர் அச்சு அசல் பெண் போலவே பாடுவார். டப்ஸ்மாஷ் செய்வார். இவருக்கென தனி ரசிகர் கூட்டமே உண்டும். சிங்கப்பூரை சேர்ந்த இவரிடம் விஜய் தொலைக்காட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என செய்திகள் கசிந்துள்ளது.

பாருங்க:  லாஸ்லியா உனக்காக வெளியா ஐ யம் வெயிட்டிங் ; உருகும் கவின் : புரமோ வீடியோ