பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த வாய்ப்பை நடிகை ஆனந்தி மறுத்துவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் விரைவில் வெளியாகவுள்ள பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசன் என இரண்டு நிகழ்ச்சிகளுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 3வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. எனவே, இந்த முறை யார் யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வமும், எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியானது.
இந்நிலையில் மிகாமன், தாரைதப்பட்டை ஆகிய படங்களில் நடித்த நடிகை ஆனந்திக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைப்பு சென்றதாகவும், தன் மகனை பிரிந்து 100 நாட்கள் இருக்க முடியாது எனக்கூறி அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.