முகப்பருக்கள் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் வரகூடிய ஒவ்வாமை. இதில் முக்கியமாக பெண்களூக்கு மட்டும் அதிக அளவில் பாதிப்பு ஏறுபடுத்தும். இதற்க்கு என்ன காரணமாக இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தால் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவு முறை தான், இதில் பெரும் பங்கினை வகுத்துள்ளது.
கொஞ்சம் நாம் அனைவரும் பாட்டி காலத்திற்கு சென்று பார்ப்போம். அன்றைய உணவில் எவ்வித கலப்படங்கள் இல்லாத போதிலும் நாம் தினமும் மஞ்சள் தேய்த்து குளிப்போம். ஆனால் இப்போது எத்தனை பேர் மஞ்சள் தேய்த்து குளிப்பதை கடைபிடிக்கின்றனர் என்பது சந்தேகமே.

மஞ்சள் முக்கியமாக கஸ்தூரி மஞ்சளில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்தது. க்ரீம்கள், லோஷன்கள் போன்றவற்றை தவிர்த்து கஸ்தூரி மஞ்சள் மட்டும் உபயோக்கித்து பாருங்கள், அவற்றின் முடிவுகள் மிகவும் அற்புதமாக இருக்கும்.
1. முகம் பளிச்சென்று மாறும்
2. முகத்தில் முகப்பருக்கள் அறவே வராது
3. முகத்தில் சுருக்கங்களை தவிர்க்கும்
4. முகம் மொழுமொழுவென்று ஜொலிக்கும்
5. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் வளர்வதை கட்டுப்படுத்தும்
6. முகத்திற்கு மட்டுமில்லாமல் உடல் முழுவதும் தேய்த்து குளிக்கலாம்
சோப்பு தேய்த்து குளித்து முடித்த பின்பு கஸ்தூரி மஞ்சளை பூசுங்கள். க்ரீம், லோஷன், பவுடர் என்று எதுவும் பயன்படுத்த தேவையில்லை. தொடர்ந்து 30 நாட்கள் பயன்படுத்துங்கள், உங்களை நீங்களே ரசிப்பீர்கள்.