Connect with us

திருமலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார்- அறங்காவலர் குழு தலைவர்

Entertainment

திருமலையில்தான் ஆஞ்சநேயர் பிறந்தார்- அறங்காவலர் குழு தலைவர்

திருமலையில் உள்ள அஞ்சனாத்ரி மலை புகழ்பெற்ற மலை ஆகும் .இங்குதான் ஆஞ்சநேயர் பிறந்ததாக வரலாறு உண்டு.

இந்த மலையை சரி செய்து புதுப்பித்து மிகப்பெரிய சுற்றுலாத்தளமாக்க புனித தலமாக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. விரைவில் இங்கு பூமி பூஜை நடைபெற இருக்கிறது.

இந்நிலையில், நேற்று இங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்தி அழகுபடுத்துவதற்காக பூமி பூஜை நடந்தது. இதில், தேவஸ்தான அறங்காவலர் தலைவர் சுப்பா, தலைமை செயல் அதிகாரி ஜவகர், கூடுதல் செயல் அதிகாரி தர்மா, விசாகசாரதா பீடாதிபதி ஸ்வரூபானந்தேந்திர சரஸ்வதி சுவாமி,துளசி பீர் சேவண்யாஸ், சித்ரகூடம் ராமபத்ராச்சாரியா மகராஜ், அயோத்தி, ராமஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை பொருளாளர் சுவாமி கோவிந்த தேவகிரிஜந்திரம் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா பேசுகையில், ‘‘அஞ்சனாத்ரியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. கோயிலில் எந்த மாற்றமும் செய்யவில்லை.  ஆஞ்சநேயர் இங்கு தான் பிறந்தார் என பல்வேறு பண்டிதர்கள், அறிஞர்கள் கூறினர். இதையடுத்து, தேவஸ்தானம் சார்பில் சிறப்பு கமிட்டி அமைத்து ஓராண்டுகாலம்  ஆராய்ச்சி செய்து அறிவியல் ரீதியாகவும், வரலாற்று கல்வெட்டுகள் ஆதாரமாக அஞ்சனாத்ரி மலையில் தான் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை உறுதி செய்யப்பட்டது,’’ என்றார்.

பாருங்க:  நீயெல்லாம் ஒரு, திருமாவளவனை காட்டமாக விமர்சித்த காயத்ரி

More in Entertainment

To Top