Connect with us

அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு – கொரொனா தடுப்பில் ஆற்றிய முக்கிய பணி!

Corona (Covid-19)

அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு – கொரொனா தடுப்பில் ஆற்றிய முக்கிய பணி!

நடிகர் அஜித் ஆலோசகராக செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழக தக்‌ஷா குழு கிருமிநாசினி தெளிப்பதில் பங்காற்றியுள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் வைரஸ் பரவல், எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நேற்று நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு கட்டமாக சாலைகளிலும் வீடுகளிலும் கிருமிநாசினிகள் வாகனங்கள் மூலமாகவும் மனிதர்கள் மூலமாகத் தெளிக்கப்பட்டு வருகின்றன. இதுபோல வாகனங்களும் மனிதர்களும் செல்ல முடியாத இடங்களுக்கு சிறிய அளவிலான ட்ரோன் விமானங்கள் மூலமாக கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

இதில் அண்ணா பல்கலைக் கழக மாணவர்களால் இயக்கப்படும் தக்‌ஷா எனப்படும் ட்ரோன் குழு  3 லட்சம் / சகிமீ கொண்ட பரப்பளவு பகுதியில் கிட்டத்தட்ட 900 லிட்டர் கிருமிநாசினிகளை தெளித்துள்ளனர். இந்த குழுவின் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் நடிகர் அஜித்தான் இந்த குழுவுக்கு ஆலோசகராக செயல்பட்டு வந்துள்ளார்.

பாருங்க:  நாப்கின் எடுத்து சென்று கொடுத்து உதவுங்கள் – கட்சி நிர்வாகிகளுக்கு கனிமொழி ஆலோசனை

More in Corona (Covid-19)

To Top