Connect with us

உத்தர பிரதேசத்துக்கு 996 கோடி… தமிழகத்துக்கு 510 கோடியா? ஏன் இந்த ஓரவஞ்சனை!

Corona (Covid-19)

உத்தர பிரதேசத்துக்கு 996 கோடி… தமிழகத்துக்கு 510 கோடியா? ஏன் இந்த ஓரவஞ்சனை!

மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ள நிலையில் வட மாநிலங்களை விட தமிழகத்துக்கு குறைவான நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வருகிறது. இன்று காலைவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4300 ஐ தாண்டியுள்ளது. 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 621 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை 6 ஆக உள்ளது. மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான இரண்டாவது மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு மாநிலங்களுக்காக ஒதுக்கிய நிதியில் தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கியுள்ளது.

இதில் அதிகமாக பாதிக்கபப்ட்ட மகாராஷ்டிரா மாநிலத்துக்கு 1611 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் அடுத்த இடத்தில் இருக்கும் தமிழகத்துக்கு 510 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை விட பாதிப்பு கம்மியாக உள்ள உத்தரபிரதேசத்துக்கு(300க்குள்) 966 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பாஜக ஆட்சி செய்யாத தென்னிந்திய மாநிலங்கள் எல்லாவற்றுக்கும் நிதி குறைவாக ஒதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பாருங்க:  3800 ஏடிஎம் களை சுத்தம் செய்ய உத்தரவு – சென்னையில் மேலும் சில அதிரடி நடவடிக்கைகள்!

More in Corona (Covid-19)

To Top