Connect with us

வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

Corona (Covid-19)

வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் அத்தியாவசிய தேவை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும் என்றும் அனைத்து சேவைகளும் முடக்கப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மக்களை சுத்தமாகவும் ஆரோக்யமாகவும் இருக்க சொல்லி அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் சானிட்டைசர்கள் தட்டுப்பாடும் அப்படியே கிடைத்தாலும் அதிக விலைக்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு சானிட்டைசர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தாங்களே தங்கள் வீடுகளில் சானிட்டைசர்கள் தயாரிப்பது எப்படி என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அவர் ‘‘“320 கிராம் பிளீச்சிங் பவுடரை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும், சிறிதுநேரத்தில்பிளீச்சிங் பவுடர் அடியில் தங்கவும் தெளிந்த நீரை சேமித்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த நீரை ஒன்பது லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமிநாசினியாகப் பயன்படுத்தலாம்.இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமிநாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு ஒன்பது லிட்டர் கிருமிநாசினியும் கிடைக்கும். வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும்’ எனத் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  பிரபல கிரிக்கெட் வீரர் திருமணம்

More in Corona (Covid-19)

To Top