SBI வங்கியில் க்ளரிக்கல் பணிக்கான காலியிடங்கள் நிறப்பப்பட உள்ளன. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி க்ளர்க் பணிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இத்தேர்வில் பங்குகொள்ளவிருப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் : 10-04-2019.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 03-05-2019.
இத்தேர்வு, இரண்டு கட்டமாக, முதன்மை மற்றும் முதல்நிலை தேர்வுகளாக நடத்தப்படும். முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்ற பின் நேர்முகத் தேர்வு நடைபெறும்.
முதன்மை தேர்வு – ஜூன் மாதம் நடைபெறும்.முதல்நிலை தேர்வு – ஆகஸ்ட் மாதம் நடைபெறும்.
எஸ்சி, எஸ்டி, மாற்று திறனாளிகள் பிரிவினர் ரூ.125 தேர்வுகட்டணம் செலுத்த வேண்டும். பொது, OBC, EWS பிரிவினர் ரூ.750 தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் www.sbi.co.in.
மேலும் விவரங்களுக்கு, www.sbi.co.in/webfiles/uploads/career என்ற இணையதளத்தை அனுகவும்.