2019 உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் தேர்வு – சிறப்பு இலவச பயிற்சி!

538

எஸ்.ஐ மற்றும் காவலர் தேர்வுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னையில் இலவச பயிற்சி நடக்கவுள்ளது. இதை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் நடத்தவுள்ளது. மத்திய மற்றும் மாநில அளவிளான அனைத்து பொது தேர்வுகளுக்கான, இலவச பயிற்சி வகுப்புகளை இந்த கல்வி நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தமிழக காவல் துறையில், ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை உள்ளிட்ட 969 காலி காலியிடங்கள் மற்றும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பு துறையில் உள்ள மொத்தம் 8826 காலியிடங்கள் நிறப்பிடும் வகையில், தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாக ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களுக்கு, தேர்வுக்கான இலவசப் பயிற்சியையும் சென்னை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து எஸ்.ஐ. பணியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.

இதுகுறித்து, அம்பேத்கர் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறுகையில் :

அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் எஸ்.ஐ பயிற்சிக்கான சிறப்பு வகுப்பு வரும் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கவுள்ளது.வகுப்பிற்கு வரும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பித்தின் Xerox copy-யை கட்டாயம் உடன் கொண்டுவரவும்.இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

பாருங்க:  8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்பு
Previous articleமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்; தேர்தல் ஆணையர்!
Next article2019 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை எங்கே கிடைக்கும் தெரியுமா?