ராணுவத்திற்கு நேரடி ஆட்கள் சேர்ப்பு; கல்விதகுதி: 8/10/12

319

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு நெய்வேலியில் நடைபெறும் நேரடி ஆட்கள் சேர்ப்பு மூலம் (Army Recruitment Rally) தகுதியானவர்கள் தேர்வு செய்யபட இருக்கிறார்கள். இதில் கடலூர், வேலூர், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ளவும்.

ஆட்சேர்ப்பு நடைபெறும் தேதிகள் : ஜூன் 7 முதல் 17 வரை

ஆட்சேர்ப்பு நடைபெறும் இடம் : Bharathi Stadium, Neyveli, Tamilnadu.

1.10.2019 தேதியின் படி குறைந்தது 17 1/2 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 23 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி :
1) 1.6. கி.மீ. தூரத்தை 5 நிமிடம் 45 வினாடிக்குள் ஓடி கடக்க வேண்டும்.

2) 9 அடி நீளம் தாண்டுதல் மற்றும் Pullups எடுத்தல், Balancing Beam செய்தல் ஆகியவற்றில் வெற்றி பெற வேண்டும்.

உடற்தகுதி தேர்வின் போது நடத்தப்படும் போட்டிகள், திறமை அடிப்படையில் வழங்கப்படும் மதிப்பெண்கள் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்படும்.

மேலும், ராணுவ மருத்துவர்களால் நடத்தப்படும் மருத்துவத் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

மேற்கண்ட அனைத்து தேர்விலும் வெற்றுப்பெற்றவர்கள் மட்டும் எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர். எழுத்து தேர்வு நடைபெறும் தேதி, இடம், முகவரி போன்ற விவரங்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் 18.5.2019-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் பார்க்கலாம்.

பாருங்க:  தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைக்கு APPLY செய்வது எப்படி தெரியுமா?
Previous articleIPL 2019: மீண்டும் RCB தோல்வி! மும்பை அபாரம்!!
Next articleSBI யில் சீனியர் எக்சிகியூட்டிவ் பணிகள் – Specialist Officer!