வேலை வாய்ப்பு
பொறியியல் பட்டதாரிகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2019!
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 224 காலியிடங்கள் நிரப்ப படவுள்ளன. இதில், உதவி பொறியாளர், சுற்று சூழல் விஞ்ஞானி, உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணிக்கான தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உதவி பொறியாளர் பணியில் 73 இடங்களும், சுற்று சூழல் விஞ்ஞானி, பணியில் 60 இடங்களும், உதவியாளர் பணியில் 36 இடங்களும், தட்டச்சர் பணியில் 55 காலியிடங்களும் நிறப்ப படவுள்ளன.
அறிவிப்பு வெளியான தேதி: 06-03-2019
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25-03-2019
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-04-2019
ஆன்லைன் மூலம் எழுதப்படும் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
பொது பிரிவினர், பிசி மற்றும் எம்.பிசி பிரிவினர்க்கு ரூ.500 மற்றும் எஸ்ஸி, எஸ்டி, மாற்று திரனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ.250 தேர்வு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், விரிவான தகவல்களை பெற www.tnpcb.gov.in என்ற இணையத் தளத்தை அனுகவும்.