Corona (Covid-19)
கொரோனா பீதி – பக்தர்களை வரவேண்டாம் என சொல்லும் திருப்பதி வெங்கடாஜலபதி !
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சுறுத்தல் அதிகமாக உள்ள நிலையில் திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் 40 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகின்றன. இதுவரை 4000 பேருக்கும் மேல் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வைரஸில் இருந்த தற்காத்துக் கொள்ள மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலம் வைரஸ் பரவலைத் தடுக்க காய்ச்சல் மற்றும் இருமல் இருப்பவர்கள் கோயிலுக்கு வரவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த அறிவிப்பானது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
