4 பேருக்கும் நிறைவேற்றப்பட்டது தண்டனை – எல்லா பெண்களுக்கும் கிடைத்த நீதி என நிர்ப்யா தாயார் பேச்சு !

317

நிர்பயா கொலை வழக்கின் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் இன்று டெல்லி திஹார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் கடந்த கடந்த 2012 ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும்பேருந்தில் வைத்து நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்தது. இந்த  சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதையடுத்து அந்த வழக்கில் கைது செய்ய பட்ட குற்றவாளிகளில் அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கும் இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

6 பேர் கொண்ட கும்பலில் மைனர் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். உயிருடன் இருந்த நான்கு பேரின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர் பல வழிகளில் தூக்கு தண்டனையை தடுக்க முயன்றனர். இதற்காக குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அளித்தல், சர்வதேச நீதிமன்ற்த்தை நாடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனால் பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் தண்டனை தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று காலை அவர்கள் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை திகார் சிறையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனைக்குப் பின்னர் பேசிய நிர்பயாவின் தாயார் ‘இது நிர்ப்யாவுக்கு மட்டும் கிடைத்த நீதி அல்ல… எல்லா பெண்களுக்கும் கிடைத்தது’ என சொல்லியுள்ளார்.

பாருங்க:  கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை - கள்ளக்காதல் காரணமா?
Previous articleலஞ்சம் வாங்கி மாட்டிய BDO – பயத்திலேயே உயிரை விட்ட பரிதாபம் !
Next articleகொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மருந்து – சீனாப் பரிந்துரை !