இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி ஒரே நாளில் 40,000 கோடிகளை பங்குச்சந்தையில் இழந்துள்ளார்.
கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பொருளாதார வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் கச்சா எண்ணெயின் விலையும் பலமாக அடி வாங்கியுள்ளது. இதனால் இன்று பங்குச்சந்தை மிகமோசமாக அடி வாங்கியுள்ளது.
இதனால் பங்குச்சந்தையில் புள்ளிகள் பலமாக அடிவாங்கியுள்ளன. இதில் இந்தியாவின் நம்பர் 1 தொழிலதிபரான முகேஷ் அம்பானியும் தப்பவில்லை. அவரின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்கின் மதிப்பு 1,095 வரை குறைந்தது. இது கடந்த 11 ஆண்டுகளில் மிகவும் மோசமான புள்ளியாகும்.
இதன் மூலம் இன்று ஒருநாளில் மட்டும் அவரின் சொத்து மதிப்பு கிட்டதட்ட 40,000 கோடி ரூபாய் சரிவடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது அவரது சொத்து மதிப்பின் 12 சதவீத வீழ்ச்சியாகும்.